செல்லமுடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…

15 August 2020, 9:38 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே குடிநீர் கேட்டும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் மஞ்சாரள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது ஊராட்சி மன்ற நிர்வாகம் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது நிலத்திற்கு அருகாமையில் உள்ள ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்காமல் திரும்பிச் சென்றனர். அதனால் உடனடியாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் செல்லமுடி ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏரியூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மக்களின் போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல், சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சென்றதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

Views: - 28

0

0