தருமபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா: மோட்டார் பைக்கில் சென்று விழிப்புணர்வு

21 January 2021, 4:23 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவில் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மோட்டார் பைக்கில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாரவிழா பேரணி நடைபெற்றது. இந்த இருசக்ர வாகன விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு அரசுதுறையை சேர்ந்த பெண்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி பாரதிபுரம்,செந்தில்நகர்,இலக்கியம்பட்டி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை வழியாக சென்று இறுதியாக தருமபுரி நான்கு ரோட்டில் முடிவுற்றது. நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்ற விழிப்புணர்வு பேரணியில் பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவும் மோட்டார் பைக்கில் சென்று சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Views: - 0

0

0