தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்து: 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…
Author: kavin kumar6 October 2021, 2:32 pm
தருமபுரி: அரூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கம்பைநல்லூர், அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அப்பள்ளியில் மாணவ மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அப்பள்ளிக்கு அரூர் பகுதியில் இருந்து 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்துக்கொண்டிருந்த போது அரூர் அடுத்த அக்ராஹரம் பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையோரம் எதிர்பாரதாவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு லேசான காயம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அருகாமையில் இருந்த பொது மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த மாணவ மாணவிகளை மீட்டு வேறு வாகனம் மூலம் அரூர் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், ஊதியம் வழங்க முடியாததால், ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்களை குறைவாக வைத்து, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் முறையான ஓட்டுனர் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே வாகன போக்குவரத்து அலுவலர்கள் பள்ளி வாகனங்களை இயக்க, போதிய அனுபவம் மிக்கவர்களை கொண்டு வாகனங்கள் இயக்கப்படுவதால் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுவதாகவும், இயக்கபடாமல் இருந்த பள்ளி வாகனங்களை போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0