வட்டி பணம் கொடுக்காததால் நான்கு மாடுகளை ஓட்டிச் சென்ற கந்து வட்டி கும்பல்: மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் விவசாயி மனு

25 September 2020, 7:16 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே வட்டி பணம் கொடுக்காத காரணத்தால், பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மீட்டு தரக்கோரி காவல் நிலையத்தில் விவசாயி மனு அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனி ஆறுமுகம். இவர் இவரது நண்பர் மூலம் நல்லம்பள்ளியை சேர்ந்த இளையராஜாவிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கைமாற்றாக 1 இலட்சம் பெற்றுள்ளார். இந்த ஒரு இலட்சத்தை இரண்டு தவணையாக வழங்கி உள்ளார். ஆனால் அந்த ஒரு இலட்சத்துக்கு வட்டி ஒரு இலட்சம் வழங்க வேண்டும் என இளையராஜா விவாசாயி முனிஆறுமுகத்திடம் தொடர்ந்து கட்டாயப்படுத்தி கேட்டுள்ளார்.

ஆனால் விவசாயி அசல் வழங்கிவிட்டேன். என்னால் அவ்வளவு வட்டி வழங்க முடியாது என கூறியதையடுத்து நேற்று இளையராஜா மற்றும் அவரது மனைவி இருவரும், விவசாயி முனிஆறுமுகம் மற்றும் அவரது மாமனார் ஆகியோரின் நான்கு பசுமாடுகளை வட்டிதொழிலாளி இளையராஜா ஓட்டி சென்றுள்ளார். இது குறித்து விவசாயி முனிஆறுமுகம் பென்னாகரம் காவல் நிலையத்தில் வட்டி பணம் கொடுக்காத காரணத்தால், பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மீட்டுகொடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.

Views: - 1

0

0