கொடுத்த பணத்தை கேட்ட பைனான்சியருக்கு கொலை மிரட்டல்… நீதிமன்றத்தை நாடிய பைனான்சியர்…

3 August 2020, 10:03 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் பைனான்சியரிடம் 75 லட்சம் ரூபாய் பணம் வாங்கிகொண்டு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது நீதிமன்ற உத்திரவுபடி நகர காவல்துறையினர் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தருமபுரி ரயில்வே நிலையம் செல்லும் சாலையில், நாசர் என்பவர் அரசு பதிவு பெற்று பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் திருவெங்கடமூர்த்தி என்பவருடம் அவரது மனைவி சகிலாவும் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் இதனை புதுபிக்க பணம் தேவை என அவ்வப்போது 75 இலட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால் பணம் கொடுத்த நாசர் வட்டி கொடுக்கவில்லை என்றாலும் பரவாவில்லை எனக்கு அசல் மட்டும் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதற்கு பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் அடியாட்களை வைத்து மிரட்டி உள்ளனர். இதனை மீறியும் பணம் திருப்பி கேட்டால் கந்துவட்டி கொடுமை செய்கிறாய் என புகார் அளிப்போம் என மிரட்டி உள்ளனர். இதனால் நாசர் பணம் கொடுத்தற்காகன வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்துடன் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றிவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

பணத்தை கேட்டால் அரசியல் பிரமுகர்கள் மூலம் மிரட்டுவதாவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களிடமிருந்து 75 இலட்சம் ரூபாய் பணத்தை மீட்டு தரவேண்டும் என தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரிக்கும் நிலையில் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாசர் தங்களை கந்து வட்டி கொடுமை செய்வதாக புகார் அளித்தனர். இதனிடையே பணம் கொடுத்து ஏமாறிய நாசர் தருமபுரி நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து பணம் வாங்கிகொண்டு ஏமாற்றிவர்கள் வழக்கை திரும்பபெற வேண்டும் என பைனான்சியரை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து நாசர் மீண்டும் நீதிமன்றதில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தருமபுரி நீதிமன்ற நீதிபதி பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றி வழக்கை வாபஸ் பெற வேண்டியும், ஆதரங்களை கொடுக்க வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததாக திருவெங்கடமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்திரவிட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரி நகர காவல் துறையினர் திருவெங்கடம் உட்பட 5 பேர் மீதும் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 1

0

0