வீட்டில் பதுக்கி வைத்திருந்த 402 மதுபாட்டில்கள் பறிமுதல்: பெண் ஒருவர் கைது

Author: Udhayakumar Raman
12 March 2021, 9:34 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 402 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, பெண் ஒருவரை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் அரசு மதுபான பாட்டில்களை அனுவமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது. இதனால் 24 மணி நேரமும் சந்துக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை அமோக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சாலைகுள்ளாத்திரம்பட்டி கிராமத்தில், பெண் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக தருமபுரி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தருமபுரி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாரதிமோகன் தலைமையில் காவலர்கள் சாலை குள்ளத்தாரம்பட்டியில் உள்ள அப்பெண்ணின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அரசு மதுபான பாட்டில்கள் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 83 பீர் பாட்டில்கள், 319 மதுபாட்டிகள் என மொத்தம் 402 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மகேஷ்வரி என்கிற பெண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 48

0

0