12 மணிக்கு வேக, வேகமாக ஓடி வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்

7 May 2021, 3:31 pm
Quick Share

தருமபுரி: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அரூரில் மது கடை மூடும் நேரமான 12 மணிக்கு வேக, வேகமாக ஓடி வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து தினந்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த நேற்று மே 6 முதல் வருகின்ற 20 தேதி வரை தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகம் உள்ளிட்டவை முழு நேரமும் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இதில் அரசு மதுபான கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்கப்படும் என நேரத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது.

தொடர்ந்து நேற்று முதல் காலை 8 மணிக்கு மதுக்கடைகள் திறந்து நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டது. மேலும் அரசு மதுபான கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைத்தது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இதனால் கடை மூடும் 12 மணிக்கு வந்த சில மதுப்பிரியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் இன்று இரண்டாம் நாளில் காலை முதலே மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க தொடங்கினர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு மதுபான கடைகளில், கடை மூடும் 12 மணிக்கு, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல்,

முட்டி மோதிக்கொண்டு மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை 2, 3, 4 என வாங்கி சென்றனர். தொடர்ந்து மூடும் நேரம் நெருங்கியதும், வேக வேகமாக ஓடி வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் 12 மணிக்கு ஊழியர்கள் கடை மூடியதால், வெளியே வந்து நின்று, கதவை தட்டிப் பார்த்து மது வாங்க முடியாமல், மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Views: - 64

0

0