மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்

8 May 2021, 5:08 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மதுபான கடைகளில் மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருகிற 10 ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்பதால் அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் காலை முதல் மாலை 6 மணி வரை முழு நேரமாக கடைகளை திறந்து வைக்க தமிழகஅரசு உத்தரவு பிறபிக்கபட்டிருந்தது. அதனால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிமாகவே காணப்பட்டது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி அரூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 65 அரசு மதுபானக்கடைகள் உள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள அரசு மதுபான கடைகளில் நீண்டதொரு வரிசையில் நின்று அதிக கூட்டத்தோடு முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல், முட்டி மோதிக்கொண்டு மதுப்பிரியர்கள் மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து இதேநிலை ஏற்பட்டால் குறுகிய காலத்தில் கொரோனாவின் தொற்று உச்சம் அடைந்து விடும் என்பது சமூக ஆர்வலர்களின் குமுறலாக உள்ளது.

Views: - 46

0

0