தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமக திருத்தேரோட்ட விழா

26 February 2021, 3:26 pm
Quick Share

தருமபுரி: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமக திருத்தேரோட்ட விழா இன்று கொடியேற்றுத்துடன் வெகு விமர்சியாக துவங்கியது.

இப்பூவுலகில் அவதாரம் செய்த இராமபிரான் இராவணனை சூரசம்ஹாரம் செய்து, திரும்புகையில் முதல் கால பூசையை இராமேஸ்வரத்தில் முடித்துவிட்டு, இரண்டாம் கால பூசைக்காக தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள தீர்த்தமலைக்கு வந்து தீர்த்திகிரி மலை மீது அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூசையை முடித்தார். பின்னர் இந்த தீர்த்தமே இராமர்தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் பார்வதிதேவி, குமரகடவுள், அக்னி தேவன்,

அகத்திய முனிவர் ஆகியோர் தவம் செய்து பாவம் விமோச்சனம் பெற்ற இத்திருத்தலம் அருணகிரி நாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் என்ற பெருமையான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசிமக திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறும். இதே போல் இந்தாண்டும் மாசிமக திருத்தேரோட்டத்தையொட்டி இன்று தீர்த்தமலை தீர்த்கிரீஸ்வரர் திருக்கோயிலில் கொடியெற்ற விழாவில் தீர்த்தகிரீஸ்வரரும், சிவகாமி அம்மையாரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து கோயில் வலம் வந்தனர்.

இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இன்றையிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் பல்வேறு அபிஷகங்களும், தீபராதனைகளும் நடைபெற்று பல்வேறு வாகனத்தில் தீர்த்தகிரீஸ்வரர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 9 ஆம் தேதி மாசிமக திருத்தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற உள்ளது.இந்த விழாவில் திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகைபுரிய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறையினர் செய்து வருகின்றனர்.

Views: - 4

0

0