சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
Author: kavin kumar19 August 2021, 5:57 pm
தருமபுரி: தருமபுரியில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில், சமையல் எரிவாயு சிலிண்டர் 25 ரூபாயாக அதிகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பெண்கள் ஒப்பாரி வைத்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் தவமணி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்துகொண்டனர்.
Views: - 512
0
0