கண்டெயினர் லாரி மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலி

9 May 2021, 6:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே கண்டெயினர் லாரி மோதிய விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோவை மாவட்டம் இடையர்பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஸ் ஆகிய 2 இளைஞர்களும் சேலம் நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தருமபுரியை அடுத்த தொம்பரக்காம்பட்டி அருகே முன்னாள் சென்ற லாரியை முந்தி சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அருகே சென்று கொண்டிருந்த கண்டெயினர் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

 தகவலறிந்த தொப்பூர் காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கண்டெயினர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டதால் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

Views: - 57

0

0