பொது ஏலம் விடப்பட்ட இருசக்கர வாகனங்கள்:வருவாய் ஈட்டிய அரசு

10 September 2020, 11:16 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் கைப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் 8 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் பொது ஏலம் விடப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களிலும் மற்றும் தருமபுரிஇஅரூர் மதுவிலக்கு பிரிவினர்களால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 89 இருசக்கர வாகனம் இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 8 மணி அளவில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் 10 மணிக்கு பொது ஏலம் துவங்கியது. பொது ஏலம் எடுப்பதற்காக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கூடியதால் சமூக இடைவெளியின்றி காணப்பட்டது.

மேலும் வாகனங்களுக்கு விற்பனை விலை மற்றும் விற்பனைக்கான வரி 12 விழுக்காடு மற்றும் விற்பனை வரிக்கு சேவை வரி 5 விழுக்காடு என வாகனங்கள் ஏலத்திற்கு எடுத்தவர்கள் மொத்தமாக செலுத்த வேண்டும். வாகனங்கள் குறைந்த பட்ச விலையாக 500 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 30 ஆயிரத்திற்கும் வாகனங்கள் வாங்கப்பட்டது. இதனால் 89 வாகனங்கள் அனைத்தும் ஏலம் எடுத்த நிலையில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 886 ரூபாய் அரசுக்கு செலுத்தி வருவாய் ஈட்டியுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 8

0

0