நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் சோதனை: போலீசில் சிக்கிய தீபாவளி பரிசுகள்

12 November 2020, 10:48 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 7 இலட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இயங்கி வரும் நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தீபாவளி பரிசாக பணம் வழங்குவதாக தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து இன்று நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் உள்ளே லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அதிரடியாக நுழைந்த போது கோட்ட பொறியாளர் தனசேகரனிடம் பாலக்கோடு, அரூர், பென்னாகரம்,

பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி ஆகிய 5 வட்டங்களில் உள்ள உதவி பொறியாளர்கள் கோட்ட பொறியாளர்க்கு தீபாவளி பரிசாக இனிப்பு மற்றும் காரம் பாக்ஸ்சுடன் பணக்கவர் வழங்கிய போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்தனர். அப்போது அந்த பணக்கவரில் கணக்கில் வராத 7 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதயைடுத்து கணக்கில் வராத பணம் குறித்து 5 உதவி பொறியாளர்கள், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் கோட்ட பொறியாளர் தனசேகரிடம் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 18

0

0