வாழை மரக் கன்று, திருஷ்டி பூசணி காய்களை சாலையோரம் விட்டு சென்ற வியாபாரிகள்…

Author: Udhayakumar Raman
16 October 2021, 5:29 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆயுத பூஜை விழாவிற்கு விற்பனை செய்த வாழை மரக் கன்று, திருஷ்டி பூசணி காய்களை ஆங்காங்கே சாலையோரம் வியாபாரிகள் விட்டு சென்றனர்.

நாடு முழுவதும் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இரு நாட்களாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி வணிக நிறுவனங்களில் மற்றம் வீடுகளில் பூஜைக்காக வாழை மரங்கள் வைத்தும், பூஜை முடிந்த பின்பு வெள்ளை பூசணியை வைத்து திருஷ்டி கழிப்பதும் வழக்கம். அதற்காக வியாபாரிகள் வாழை மரக்கன்றுகளையும், பூசணி காய்களையும் சாலையோரம் வைத்து விற்பனை செய்வார்கள். அதனடிப்படையில் ஆயுதபூஜை விற்பனை முடிந்து விற்பனை ஆகாத வாழைக்கன்று, மா இலை, திருஷ்டி பூசணிக்காய் ஆகியவற்றை வியாபாரம் செய்த இடத்திலேயே விட்டுச் சென்றதால் நகரப்பகுதி முக்கிய இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது மாவட்டம் முழுவதும தொடர் மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதனால் நகராட்சி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு முன் போர்கால அடிப்படையில் ஆங்காங்கே தேங்கி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 163

0

0