முகவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம்

14 April 2021, 7:59 pm
Quick Share

தருமபுரி: அரூர் டாஸ்மார்க் சாலையில் முகவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர் .

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா வெகு வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றது. அதேபோன்று காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல்,

அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் மக்கள் முகவசம் அணியாமல் வருவது மிகவும் வேதனையாக உள்ளது. அந்த வகையில் இன்று அரூர் டாஸ்மாக் கடை சாலையில் மது பிரியர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்து மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

Views: - 15

0

0