தேசியக் கொடியை ஏற்றாமல் சென்ற பாமக ஊராட்சி மன்ற தலைவி:கிராம மக்கள் அதிர்ச்சி

26 January 2021, 7:41 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அடுத்த வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழாவான இன்று கிராமசபை கூட்டம் ரத்து என மாவட்ட நிர்வாகம் கூறியதை அடுத்து தேசியக் கொடியை ஏற்றாமல் சென்ற பாமக ஊராட்சி மன்ற தலைவி அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

72 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் அரசு அலுவலகங்கள், மாநாகராட்சி,நகராட்சி ஊராட்சி மன்ற அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளி வளாகங்களில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதே போல் தருமபுரி மாவட்டத்திலும் அனைத்து அரசு அலுவளகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தருமபுரி அடுத்துள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளாக செயலாளராக இருக்கும் தன்ராஜ் என்பவரின் அக்கா மீனாட்சி இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்.

இவர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்ததில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குகூட பெயர் பலகை வைக்கவில்லை எனவும் வார்டு உறுப்பினர்கள் மத்தியில் குற்றம் சாட்டு எழுந்துள்ள நிலையில் குடியரசு தினவிழாவையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவளகத்திற்கு தேசிய கொடி ஏற்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை வந்தனர். அப்போது நீண்ட நேரம் கழித்து ஊராட்சி மன்ற தலைவி மீனாட்சி வந்துள்ளார்.

அப்போது பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் ஏன் கொடியேற்றவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததாக தகவல் அளித்ததையடுத்து தேசிய கொடி ஏற்றுவதற்கும் ரத்து செய்து இருக்கலாம் என நினைத்து தேசிய கொடியை ஏற்ற மறந்து விட்டேன் என பதில் கூறி உள்ளார். இதனால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்சியடைந்தனர்.

Views: - 0

0

0