கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

1 November 2020, 7:33 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே 65 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் தங்கம் என்கின்ற 19 வயது இளைஞர் தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தனது 2 நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது கிணற்றில் குதித்த தங்கம் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லையாம் பதற்றமடைந்த நண்பர்கள் இருவரும் அருகே இருந்த கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலத்தை மீட்டனர். 65 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால் அக்கிராமத்தில் சோகம் ஏற்பட்டுள்ளது.

Views: - 15

0

0