பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்: சடலத்துடன் 8 மணி நேரம் உறவினர்கள் சாலை மறியல்

10 November 2020, 12:17 am
Quick Share

தருமபுரி: அரூர் அருகே தென்பெண்ணை ஆற்று பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் செய்ததால் காவல்துறையினர் உடலை வலுக்கட்டாயமாக கொண்டு சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியைச் சார்ந்த அபிமன்னன் ஈரோட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று ஓசூரில் இருந்து சொந்த ஊரான இளங்குன்னி பகுதிக்கு வருவதாக அவரது காதலியிடம் செல்போணில் கூறிவிட்டு ஒசூரிலிருந்து சென்றுள்ளார். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள தா.அம்மாப்பேட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கோட்டபட்டி காவல்துறையினர் சம்பவ இவத்திற்கு சென்று பார்த்த போது இளங்குண்ணி பகுதியை சேர்ந்த கிளிண்டன் என தெரிய வந்தது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகு சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து கிளிண்டனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்து அவரது உறவினர்கள் குற்றவாளிகள் கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விசாரணை செய்ததில் கிளிண்டன், அரூர் வட்டத்திற்குட்பட்ட முல்லைவணம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்செய்யப்பட்டிருந்ததும், அந்த பெண்ணிடம் நேற்று செல்போனில் கிளிண்டன் பேசியதாக தகவல் கிடைத்ததையடுத்து. அந்த பெண் மற்றும் அவரது தந்தை நல்லதம்யிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய முடிவு செய்தனர். அப்போது காவல்துறையினர் விசாரணை செய்ய வருவதையறிந்த பெண்ணின் தந்தை நல்லதம்பி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

கிளிண்டன் இறப்புக்கு காதலித்த பெண்ணின் தந்தையாக இருக்கலாம் எனவும் உடனே கைது செய்ய வேண்டும் என இறந்த கிளிண்டனின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை செய்தும் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப மறுத்து தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

காவல்துறையினர் நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டும் சாலைமறியல் கைவிடாததையடுத்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லுõரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அப்போது மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரப்பபு ஏற்பட்டது. 8 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் செய்ததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக உடலை கொண்டு சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பரபரப்பு நிலவியது.

Views: - 15

0

0