அரசு மருத்துவமனை செவிலியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
Author: kavin kumar25 October 2021, 1:44 pm
தருமபுரி: இரண்டு மாதம் சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி அரசு மருத்துவமனை செவிலியர்கள் சங்கத்தினர் 200 க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் ஈடுபட்டனர்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று செவிலியர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள், நிரந்தர பணியாளர்கள் என 169 பேர் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து பணிக்கு செல்லாமல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளமும் தற்காலிக பணியாளர்களுக்கு நான்கு மாத சம்பளமும் வழங்காததால் அடிப்படை வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாலும் வரும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளதாகவும், சம்பளம் வழங்குவதை முறையாக செயல்படுத்த முடியாத அலுவலக ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களது நிலுவை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0
0