மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காத கண்டித்து தர்ணா போராட்டம்

23 September 2020, 8:08 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து கல்லூரியில் மாணவர்களை போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் DTED மாணவிகளை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்காததை கண்டித்து மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் தேர்வவை புறக்கணித்து தேர்வு எழுதும் மையம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மாணவர்களும் இறுதியாண்டு தேர்வு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுச்சேரி பல்கலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து கல்லூரி மாணவர்களும் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் டிடிஎட் மாணவிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதக் கூடாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முழுமையாக பாடத்தை கூட நடத்தாமல் தேர்வு எழுதுவது கடினம் என கோரியும், மற்ற மாணவர்களைப் போல் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இன்றைய தேர்வை புறக்கணித்து தேர்வு எழுதும் வளாகம் முன்பு தர்ணாவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 8

0

0