பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் இயக்குனர் கௌதமன் தர்ணா போராட்டம்

Author: kavin kumar
14 August 2021, 7:56 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்குனர் கௌதமன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளரும், இயக்குனருமான கெளதமன் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். இந்நிலையில் நீண்ட நேரம் காத்திருத்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சுதந்திர தின முன்னேற்பாடு பணிகளில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனுவினை பெற்று கொண்டார்.

இந்த மனுவில் ஆனந்தவாடி கிராமமக்கள் 19 பேருக்கு வேலை வழங்குவதாக கூறி ஒரு நபருக்கு மட்டும் வேலை வழங்கியுள்ளதாகவும், இதற்கு உரிய விசாரணை செய்து தீர்வு காணவேண்டும் என கேட்டு கொள்ளபட்டுள்ளது. மேலும் தனியார் சிமெண்ட் ஆலைகளின் சிஎஸ்ஆர் நிதியின் 900 கோடியில் இருந்து பொதுமக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை எனவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Views: - 162

0

0