கொரோனா சிகிச்சை குறித்து கேட்டறிந்த பொது சுகாதாரத்துறை இயக்குனர்

11 August 2020, 10:17 pm
Quick Share

அரியலூர்; கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். அரியலூர் நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவ்விடத்திலேயே கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ பணியாளர்களிடம் மாதிரி சேகரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த இயக்குனர் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அரியலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இன்று முதல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த ஆய்வின் போது சுகாதாரதுறை இணை இயக்குனர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 6

0

0