நீலகிரியில் பேரிடரை சமாளிக்க தயார்: தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு கமாடண்ட் பேட்டி

Author: Udayaraman
24 July 2021, 4:58 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடரை சமாளிக்க தயாராக இருப்பதாக அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு கமாடண்ட் பிரமோத் மீனா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது பல இடங்களில் மண் சரிவும் மரங்கள் விழுந்து சாலை துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து கனமழை அறிவிப்பால் மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து 40பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் குழு உதகை மற்றும் கூடலூருக்கு வந்துள்ளனர். இவர்கள் உதகை எமரால்டு பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தங்கியிருந்து தகவல்களை திரட்டி உடனடியாக வெள்ளப்பாதிப்பு பகுதிக்கு செல்ல தயாராக உள்ளனர். குறிப்பாக அவலாஞ்சி எமரால்டு அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் பதிவு அதிகமாக உள்ளது. அதனால் எந்த நேரத்திலும் மரங்கள் விழுந்தாலோ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலோ பொதுமக்களை பேரிடரில் மீட்பதற்கு தயாராக உள்ளதாகவும், மீட்புப் பணிகளுக்காக அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 54

0

0