போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் கண்டுபிடிப்பு

Author: Udayaraman
14 October 2020, 10:29 pm
Quick Share

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே 20 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், கதிரிபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (52) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக, குண்டலபட்டியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சொக்கணப்ள்ளி, குரும்பட்டி, மிட்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் ராஜேந்திரன் ஆசிரியராக பணியாற்றி வருவதும், அவர் பணியில் சேர அளித்துள்ள சான்றிதழ்களில் முரண்பாடு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 47

0

0