அர்ஜுனாநதி கரையில் கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவறை கோவில் கண்டுபிடிப்பு

26 August 2020, 9:09 pm
Quick Share

விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சி அர்ஜுனாநதி கரையில் கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவறை கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சி அர்ஜுனா நதி உள்ளது. இந்த நதி பல ஆண்டுகளுக்கும் மேலாக நீர் இல்லாமல் முட்புதர்களாலும் மணல்களாலும் மூடிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதி இளைஞர்கள் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நான்கு புறம் வாசல் பகுதிகளுடன் சுரங்க பாதை காணப்பட்டது. இதை அடுத்து பெரியவர்களை அழைத்து இது குறித்து கூறியுள்ளனர்.

இந்த கோவில் முன்னோர்கள் வழிபட்டு வந்தது என்றும், இங்கு முருகன் பழனியில் இருப்பது போன்று ஆண்டிகோலத்தில் இருந்ததாகவும், அம்மன் சிலை, மற்றும் சிவலிங்கம் இருந்ததற்காக வடிவமைப்பு இருந்தது. உடனே இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் ஓய்வு பெற்ற தொல்வியல் துறை வல்லுனர் சாந்தலிங்கம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் மகாலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு பணிகளை முடித்துவிட்டு பேசிய தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம், இந்த குடவரை கோவில் கட்டுமானப் பணிகளை வைத்து பார்க்கும் போது கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த குடவரை கோவில் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் வள்ளி குகைக்கு ஈடானது என்றும் ஆனால் இதன் பாறைகள் மிகவும் மோசமானது என்றும், இந்த கோவில் தமிழகத்திலே மிக அபூர்வமான கட்டிடக்கலை இங்கு பழனி முருகன் ஆண்டிக் கோலத்தில் இருந்ததாக ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

இதன் அருகிலே உள்ள கல் மண்டபத்தில் ஐம்பொன் சிலைகள், வெள்ளை பிள்ளையார் இருந்ததாகவும் கூறியுள்ளார்கள்.ஆனால் தற்போது இங்கு எந்த சிலைகளும் இல்லை. இது குறித்து தொல்லியல் துறை இயக்குநருக்கு தகவல் வழங்கபட்டு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த குடவறை கோவில் பாதுகாக்க வழி வகுக்கபடும் என்றும் கூறினார்.

Views: - 1

0

0