பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கல்…

3 August 2020, 8:08 pm
Quick Share

அரியலூர்; 2 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்படும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான இலவச புத்தகங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 528 மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களும் 44 ஆயிரத்து 128 மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தக பைகளும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரத்னா,

மாணவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் கொரோனா காலங்களில் வீட்டிலிருந்தபடியே படிப்பதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். பாடங்களில் உள்ள சந்தேகங்களை அந்தந்த வகுப்பு ஆசிரியரிடம் செல்போனில் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என கூறினார். பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி புத்தகங்களையும் புத்தக பைகளையும் வாங்கி கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 27

0

0