பொதுமக்களுக்கு பாதுகாப்பளித்து உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் தயார்: அமைச்சர் காமராஜ் பேட்டி

25 November 2020, 5:34 pm
Quick Share

திருவாரூர்: தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பளித்து உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாஞ்சியூர், வெள்ளக்குடி, தேவங்குடி, கர்ணாவூர், கூத்தாநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மாஸ்க்,கபசுரக்குடிநீர், உள்ளிட்டவற்றையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை அளவு குறித்து தமிழக முதல்வர் இன்று காலை தன்னிடம் கேட்டறிந்ததாகவும், தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக தகவல்களை கேட்டறிந்து அதற்கேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை சுமார் 4 ஆயிரத்து 155 பேர் முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலையும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறியப்பட்டு அவர்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர படுவார்கள் என்றும் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எத்தனை பேர் முகாமிற்கு வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் எந்த வித அச்ச உணர்வும் இன்றி முகாம்களில் தங்க வர வேண்டுமென்றும் அமைச்சர் காமராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின். ஆற்றின் பலவீனமான கரைகள் கண்டறியப்பட்டு அப் பகுதிகளில் மணல் மூட்டைகள் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாகவும்தெரிவித்த அமைச்சர், புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாகவும் முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர், மாஸ்க், மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Views: - 0

0

0