அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு; நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள அறிவுரை

17 November 2020, 11:41 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த் இன்று ஆய்வு செய்தார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளான சளி மாதிரி சேகரிப்பு பணியினை ஆட்சியர் எம் .அரவிந்த் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு ,இருதய சிகிச்சை பிரிவு ,சிறுநீர் பிரிதல் பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ,மகப்பேறு பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை அதிகரிப்பதோடு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க மருத்துவர்கள் ,செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Views: - 13

0

0