பூண்டி நீர்த்தேக்க பகுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

25 November 2020, 6:38 pm
Quick Share

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்க பகுதியினை கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகங்களின் ஆணையருமான முனைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆறு மணி நேரத்தில் 31 மில்லியன் கன அடி நீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்தடைந்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பு  அதிகாரி நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்தம் உள்ள 35 அடியில் தற்போது நீர் இருப்பு 30.56 அடியை எட்டியுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் இருந்து 585 கன அடி நீர் வினாடிக்கு நீர்தேக்கத்திற்கு வருகிறது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 635 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. 3,231 மில்லியன் கன அடியில்  1872 மில்லியன் கன அடி  கொள்ளளவாக உயர்ந்துள்ளது. மொத்தம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு  1,100 கன அடி நீர் வருவதால் லிங்க் கால்வாயில் புழல் ஏரிக்கு 100 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே பூண்டி நீர்த்தேக்கத் பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனை கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகங்களின் ஆணையருமான முனைவர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நீர் இருப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Views: - 17

0

0