கொரோனா பராமரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

13 May 2021, 4:52 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் அரசு பொறியியல் கல்லூரியில் புதியதாக தொடங்க உள்ள சித்தா மருத்துவத்துடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரானா நோய் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது அதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிப்பு அடைவதோடு உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்படுவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மா.சுப்ரமணியன் சென்னையில் மிதமான கொரானா தொற்றுடையவர்கள் சித்தமருத்துவம் மூலம் சிகிச்சை பெறும் வகையில்,

தமிழகத்தில் தருமபுரி தேனி நாமக்கல் கரூர்உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயற்கைமுறை மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு அங்குசிகிச்சை பெறுபவர்களுக்கு கபசரகுடிநீர்உள்ளிட்ட மருந்துகளும் உணவே மருந்து என்கிற அடிப்படையில் மூலிகை வகை உணவுகளும் யோகா மற்றும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கபடுவர் எனக்கூறினார்.

அதனடிப்படையில் தருமபுரியை அடுத்த செட்டிக்கரையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 300படுக்கை வசதியுடன் அமையக் கூடிய கொரானா பராமரிப்பு மையத்தை இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அதிகாரிகளுடன் பார்வையிட்டு அங்கு நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்த அவர் அங்குள்ள குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளையும் பார்வையிட்டார்.இவ்ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, துணை ஆட்சியர் பிரதாப், மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 58

0

0