நூலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்: மாவட்ட ஆட்சியராக வேண்டும் என கூறிய சிறுவனுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்…

2 July 2021, 4:33 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் நானும் உங்களை போல் மாவட்ட ஆட்சியராகக வேண்டும் என கூறிய சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் தரம் , நூலகத்தின் சிறப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வு பணியினை மேற்கொண்டுவிட்டு வெளியில் வந்த போது நுழைவு வாயிலில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காத்திருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரோகித் சர்மா தானும் உங்களைப்போல் மாவட்ட ஆட்சியராக ஆகுவேன் என மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். பின்னர் சிறிது நேரம் சிறுவனின் தோலில் கை போட்டு கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாணவனுக்கு புத்தகம் பரிசளித்தார். அதுமட்டுமல்லாது தனது சொந்தப் பணம் 500 ரூபாய் செலுத்தி பெண்ணிங்டன் பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். மேலும் சிறுவன் மாவட்ட ஆட்சியராக வாழ்த்து தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

Views: - 104

0

0