செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

24 November 2020, 10:54 pm
Quick Share

காஞ்சிபுரம்: கன மழையை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 500க்கும் மேற்பட்ட தற்காலிக சிறப்பு தங்கும் முகாம்களில் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. நீர்நிலைகள் அனைத்தையும் கண்காணிக்க குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக செம்பரம்பாக்கம் ஏரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 24 அடி ஆழம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் தற்போது 21. 25 அடி நீர் உள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் முறையாக உள்ளனவா என்றும், ஒரு வாதம் சுற்றுவட்டார பகுதியில் இருந்த குடியிருப்புவாசிகள் ஏதேனும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள சிவத்தலங்கள் அரசு பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மக்களை சிறப்பு தங்கும் முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.

Views: - 14

0

0