கொரானா நிவாரண நிதி முதல் தவணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

15 May 2021, 5:54 pm
Quick Share

தருமபுரி: கொரானா நிவாரண நிதி முதல் தவணையான இரண்டாயிரம் ரூபாயை தருமபுரி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த நான்காயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி தருமபுரி வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 1071 நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் உள்ள 4 லட்சத்து 38 ஆயிரத்து 965 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி முதல்தவணையாக 87 கோடியே 79 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிவாரண நிதியை பெற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் தருமபுரி பா.ம.க.சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ,கூட்டுறவு துறை இணை பதிவாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 47

0

0