சுற்றுலா பயணிகளுடன் லெமன் இன் த ஸ்பூன் விளையாடிய மாவட்ட ஆட்சியர்…

15 January 2021, 3:22 pm
Quick Share

நீலகிரி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுற்றுலா பயணிகளுடன் லெமன் இன் த ஸ்பூன் மாவட்ட ஆட்சியர் விளையாடினர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் இப்பொங்கல் விழாவிற்கு பின்பு சுற்றுலாப் பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், மற்றும் லெமன் இந்த ஸ்பூன், போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் லெமன் இன் த ஸ்பூன் விளையாட்டில் மாவட்ட ஆட்சியர் சுற்றுலா பயணிகளுடன் கலந்துகொண்டு விளையாடினார். இதை அனைத்து சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.

Views: - 2

0

0