மல்டி வெள்ளரிக்காய் விவசாய செயல்முறைகளை திடீர் ஆய்வு செய்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்…

6 July 2021, 7:56 pm
Quick Share

திண்டுக்கல்: அரசு மானியத்துடன் நவீன முறையில் பசுமைகுடில் அமைத்து அதிக இலாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் விவசாய செயல்முறைகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைத் தாலுகா பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பாக நவீன விவாசய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பசுமைகுடி அமைத்து மல்டி வெள்ளரிக்காய் எனப்படும் குறுகிய கால பயிர் சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக நிலக்கோட்டை,கொடைரோடு, விளாம்பட்டி மட்டப்பாறை ஆகிய பகுதிகளில் அமைக்ப்பட்டுள்ள பசுமைகுடிலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பெருமாள் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்டத்தில் வேளாண்துறை மற்றும் தோட்டகக்கலைத்துறை மூலம் பல்வேறு திட்டத்தின் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக மானிய கடன் உதவி திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

மேலும் செட் அமைப்பது, விதை தேர்வு செய்து கொடுப்பது பராமரிப்பு முறை பயிற்சிகளையும் வழங்கிவருவதாகவும், வெறும் 3-மாதத்தில் மகசூழ் கிடைக்கக்கூடிய மல்டிவெள்ளரிக்காய் சாகுபடியை செய்து சாதாரணமாக 3- ஏக்கரில் சாகுபடி செய்து கிடைக்கும் வருமானம் வெரும் 25- சென்ட் நிலத்தில் கிடைக்கின்றது. சராசரியாக கிலோ-40க்கு விலைபோகிறது ஒருமுறை அறுவடைக்கு 2-டன் வரை மகசூழ் கிடைக்கின்றது ஒருமுறை சாகுபடிக்கு 10-12 முறை அருவடை செய்யலாம் எனக் கூறப்பட்டது இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மேலும் இதுபோன்று பல்வேறு பயிர்களை நவீன முறையில் விவசாயம் செய்ய முன் வர வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 93

0

0