தீக்குளிப்பு நிலையங்களாக மாறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…! கண்டுகொள்ளுமா…? மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும்,,,

Author: Udhayakumar Raman
20 September 2021, 11:31 pm
Quick Share

கரூர்: கடனுக்கு ஈடாக கொடுத்த பட்டாவை வைத்துக் கொண்டு வீடு கட்ட முயற்சிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் சிறுவர்கள் உள்பட உள்ளிட்ட 5 பேர் உடலில் டீசல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலங்களாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றாலே மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் முகாம் என்ற சொல் மாறி, தற்போது தீக்குளிப்பு நிலையங்களாகவே மாறி வரும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. இதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகமும், அந்தந்த மாவட்ட காவல்துறையும் முழு பொறுப்பேற்க வேண்டும், இந்நிலையில்,. கரூர் மாவட்டம் வெள்ளியணை தேவேந்திரன் நகரில் வசிப்பவர்கள் பெரியசாமி மனைவி சரஸ்வதி, முருகானந்தம் மகள் கெளசல்யா தனது குழந்தைகளுடன் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவுடனேயே ஒரு கேனிலிருந்த டீசலினையும், இன்னொரு கேனிலிருந்து மண்ணைண்ணையும் தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில், அங்கிருந்த சிறப்பு பிரிவு காவல்துறையும், தீயணைப்பு துறையினரும் உடனே அந்த கேனை பிடுங்கி எரிந்ததோடு, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் விசாரணையில், இவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு ஈடாக தமிழக அரசால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்ட, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கியுள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட பைனான்ஸ்காரர்கள் தங்களுடைய பட்டா பெயர் மாற்றம் செய்து அந்த இடத்தில் வீடு மட்டும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறி சரஸ்வதி, கெளசல்யா ஆகியோர் குழந்தைகளுடன் வந்து உடலில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. அப்போது தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை சோதனை செய்த பிறகே அனுமதித்து வந்த நிலையில் எப்படி மண்ணெண்ணெய் கேன் உள்ளே கொண்டு வந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிட்டதால், தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றாலே மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்பதை விட்டு, விட்டு, தீக்குளிப்பு நிலையங்களாகவே செயல்படுவதால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையினரும் உடனே நல்ல தீர்வினை காண வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்கள்

Views: - 132

0

0