வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கிய மாவட்ட கண்காணிப்பாளர்!!!!!

29 August 2020, 9:27 am
Quick Share

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலை தூரம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி விழிப்புடன் வாகனத்தை இயக்க அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையில், கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர், சூலூர் ஆய்வாளர் மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் நேற்று இரவு சூலூர் சிந்தாமணி சுங்கச்சாவடிக்கு சென்றனர்.

அங்கு வைத்து
இரவு நேரத்தில் தொலை தூரம் வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புடன் வாகனத்தை இயக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

மேலும், வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து வாகனத்தை கவனமுடன் ஓட்ட அறிவுரை கூறினார்.

Views: - 21

0

0