அடுத்த வாரம் கொண்டாட்டம்: தீபாவளி விற்பனை களைகட்டியது புத்தாடை வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

8 November 2020, 8:19 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் தீபாவளியையொட்டி ஆர்வத்துடன் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்ததால் கண்காணிப்பு கேமெராவை கொண்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

தீபாவளி வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உடைகள், அலங்கார பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்ற்னர். குறிப்பாக ஞாயிற்றுகிழமையான இன்று புதுச்சேரி முக்கிய கடைவீதிகளான காந்திவீதி, நேரு வீதி, அண்ணா சாலை, மிஷன் வீதிகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க அலை மோதுகின்றனர்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காந்திவீதி, நேரு வீதிகளில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க பட்டு வருகின்றது. மேலும் காந்திவீதியில் அமைந்துள்ள சண்டே மார்க்கெட் இருபுறங்களிலும் சாலையோர கடைகளில் பொதுமக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மேலும் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுஅனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் காந்திவீதி, நேரு வீதி சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 19

0

0