காவேரிப்பட்டணத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Author: Udhayakumar Raman
26 March 2021, 9:05 pm
Quick Share

கிருஷ்ணகிரி: பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகனுக்கு காவேரிப்பட்டணம் சுற்று வட்டார பகுதிகளில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் காவேரிப்பட்டணம் அடுத்த வேலம்பட்டிகூட்ரோடு, நாகரசம்பட்டி, செல்லம்பட்டி, என்தட்டக்கல், பாரூர், ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பானவறவேற்பு அளித்தனர். வாக்கு சேகரித்தபோது மதியழகன் பேசியதாவது:- அதிமுக அரசு தொடர்ந்து 10- ஆண்டுகள் ஆட்சி செய்தும் மக்களுக்கு எந்தவித பயனும் செய்து தரவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து எனக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இப்பகுதியில் குடிநீர் பிரச்சினையை சரி செயயவும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும், மாதந்தோறும் பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கிடைத்திடவும், பால் விலை குறைப்பு, கேஸ்மானியம் வழங்குதல் மற்றும் பெண்களுக்கு சொத்தில் சரிபாதி பங்கு வழங்கியது கலைஞர் அரசு. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மகப்பேறு உதவித்தொகை கிடைத்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Views: - 39

0

0