அனுமதி இல்லாமல் மண் அள்ளிய திமுக மாவட்ட கவுன்சிலர்: எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

Author: Udhayakumar Raman
31 August 2021, 5:15 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய திமுக மாவட்ட கவுன்சிலர் எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் திமுகவை சார்ந்த இவர் தற்பொழுது குடவாசல் வடக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் குடவாசல் அருகே சீதக்கமங்கலம் பம்மல் சாலையில் திருமலைராஜன் ஆற்றுப் பாலம் அருகே சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மண் அள்ளியதாக அப்பகுதி மக்கள் குடவாசல் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து குடவாசல் வட்டாட்சியர் மற்றும் நன்னிலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குடவாசல் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்பொழுது மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன் ஆற்றுப்படுகையில் மண் எடுத்தது உறுதியானதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் அதிகாரிகளிடம் சாலை போடுவதற்காக மண் எடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குடவாசல் காவல்துறையினர் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக சார்ந்த மாவட்ட கவுன்சிலர் என்ற ஒரே காரணத்தினால் கண்துடைப்புக்காக இதுபோல நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கருத்து சொல்ல அச்சப்படும் அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் மண் அள்ளுவதால் சுடுகாட்டிற்கு செல்லமுடியாத நிலை ஏற்படும் எனவே அந்தப் பகுதியில் மண் எடுப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மேலும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Views: - 108

0

0