கோவையில் திமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை

28 October 2020, 2:54 pm
Quick Share

கோவை: திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் வீட்டில் 7பேர் கொண்ட வருமான வரிதுறை குழுவினர் இன்று மதியம் உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள திமுக தொண்டர்கள் வீட்டின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பி வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததால் இச்சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதத்திற்கு முன்பு தான் இவர்க்கு திமுக பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0