சொன்னதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Author: kavin kumar
31 July 2021, 11:47 pm
Quick Share

மதுரை: தேர்தலின் போது பொய் வாக்குறுதியை கூறி ஆட்சியைப் பிடித்து சொன்னதை நிறைவேற்றாமல் மக்களை திமுக அரசு ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், மேற்கு சட்டமன்ற உறுப்பினரான செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மத்திய தொகுதி கழக கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ராஜா மற்றும் பொருளாளர் அண்ணாதுரை உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசியதவாது:- எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வு குறித்து போராடிய ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று மாணவர்களை கேட்கிறார்.

சிலிண்டர் விலை மானியம் குறைப்பு பெட்ரோல் விலை குறைப்பு என்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி விட்டு தற்போது அவற்றை கொஞ்சம் கூட கவனிக்காமல் ஆட்சியில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது மதுரைக்கு எண்ணற்ற பல நலத்திட்டங்களை கொடுத்துள்ளோம். எதிர் வரக்கூடிய உள்ளாட்சியில் அந்தத் திட்டங்களின் சிறப்புகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். மதுரையில் பொலிவுறு நகரத் திட்டம் என்று சொல்லக்கூடிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பெரியார் பேருந்து நிலையம் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பல அடுக்கு வாகன காப்பகம் என பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை சுற்றி கோபல் வகை கற்கள் பதிக்கப்பட்டு புராதன சின்னங்களாக விளங்குகின்றன.  அதேபோன்று அதைப் போன்றே மாசி வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வைகைக் கரையில் இரண்டு புறங்களிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு நகரின் போக்குவரத்து குறையும் வண்ணம் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மதுரைக்கு எண்ணற்ற பல நலத்திட்டங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களை வழியில் வந்து சந்திக்காமல் வீட்டிலேயே இருந்துகொண்டு காணொலி காட்சி மூலம் உரையாற்றியவர் தான் தற்போதைய நிதியமைச்சர்.

நாம் செய்த திட்டங்களை தற்போது இருக்கக்கூடிய அதிமுக அமைச்சர்கள் மறைக்கிறார்கள். மதுரை மக்களின் நீண்டநாள் கனவாகிய 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வண்ணம் தங்கு தடையின்றி கிடைக்க கூடிய வகையில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் கொண்டு வந்தது நாம் அவருக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.2023 க்குள் அந்தப் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். மதுரை அதிமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய வகையில் மீண்டும் 100 வார்டுகளில் நமது அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று  நாளை மறுநாள் மேற்குத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை ஈடுபட உள்ளோன் என்றார். மேலும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய செல்லூர் ராஜூவின் கீழ் வரக்கூடிய வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி மற்றும் மத்திய தொகுதிகளில் இருக்கக்கூடிய முக்கிய உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், நாளை மறுநாள் மேற்குத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை ஈடுபட உள்ளார்.

Views: - 229

0

0