திமுக இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை: திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

20 September 2020, 4:29 pm
Quick Share

விருதுநகர்: திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை தொடங்கிய 3 நாள்களில் 1 லட்சம் மேற்ப்பட்டவர்கள் இளைஞர்கள் பெண்கள் திமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக கட்சியில் புதிய உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் சேர்க்கும் நிகழச்சி நடைபெற்றது. அதை பார்வையிட்ட முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை தொடங்கிய 3 நாள்களில் 1 லட்சம் மேற்ப்பட்டவர்கள் இளைஞர்கள் பெண்கள் திமுகவில் சேர்ந்து இருப்பதாகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் நிகழும். ஸ்டாலின் முதல்வராக உருவாக்குவோம் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் திட்டம் நடைபெற்று வருவதாகவும்,

பிளஸ் 2 தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் வேறு, நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் வேறு. நீட் தேர்வு சமுகநீதிக்கு எதிரானது மாணவர்களின் சம வாய்ப்பை வாய்பை தட்டி பறிக்கும் வேதனையின் வெளிப்பாட்டால் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. ப்ளஸ் டூ தேர்வு நீட் தேர்வையும் குழப்பிக்கொள்ளக் கூடாது மாணவர்களின் தற்கொலையைத் பாஜக திசை திருப்புகிறது. மும்மொழி கல்வி கொள்கை தேவை இல்லாத ஒன்று. மும்மொழி கொள்கை மறை முகமாக இந்தியை திணிக்கும் தந்திரமான திட்டம். திமுக இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தித் திணிப்புக்கு எதிரானவர்கள்.

நீட் தேர்வை எதிர்கொள்ள தயங்கி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என்பது நீதி மன்றத்தின் கருத்து. திமுக நிவாரணம் வழங்குவது இறந்த மாணவர்களின் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்குகிறது. நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிப்பதாக திமுக கருதவில்லை. கல்வி விவசாயம் என மாநில உரிமைகளை மத்திய அரசு படித்துக்கொண்டே வருகிறது என்றார்.