வேளாண் சட்டத்தை கண்டித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
28 September 2020, 4:23 pmதருமபுரி: விவசாய விரோத வேளாண் சட்ட மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசையும், ஆதரித்த தமிழக அரசையும் கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோத சட்டத்தை எதிர்த்து மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு தருமபுரி திமுக மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை கண்டித்து அதற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரை செல்வன், திமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.