குதிரை அணிவகுப்புடன் திமுகவினர் வாக்குசேகரிப்பு

31 March 2021, 1:28 pm
Quick Share

திருவள்ளூர்: பாடியநல்லூரில் குதிரை அணிவகுப்புடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து கார்ட்டூன் வேடமணிந்து நூதன முறையில் திமுகவினர் மாதவரம் சட்டமன்ற வேட்பாளர் சுதர்சனத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுதர்சனம் பாடியநல்லூர் பகுதியில் மொண்டியம்மன்நகர், பிடிமூர்த்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குதிரைகள் அணிவகுப்புடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கார்ட்டூன் வேடமணிந்து நூதன முறையில் கட்சியினர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
இதில் திமுக ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

Views: - 13

0

0