அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பரிசளித்த திமுக: ஆட்சியரிடம் பொருட்கள் ஒப்படைப்பு
Author: kavin kumar12 January 2022, 7:06 pm
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக 10 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வருகின்ற வருகின்ற 14ஆம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் சிறந்த மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பங்குபெறும் சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்குவதற்காக
20 வாஷிங்மெஷின், 20 பீரோ, 100 தங்கக் காசுகள் போன்ற மொத்தம் 10 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருள்களை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனீஸ் சேகர் நேரில் சந்தித்து பரிசு பொருட்களை வழங்கினார். இதில் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
0
0