கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றி வாகை சூட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் மக்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக நிறைவேற்றி, சாதனைப் படைத்து வருகிறார். அதனடிப்படையில், திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நற்பெயர் இருக்கிறது. இதையடுத்து, நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்,
திருக்கோவிலூர் நகராட்சியில் போட்டியிடக்கூடிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி வாகை சூட வேண்டும். அதற்காக, இன்று முதலே அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். திருக்கோயிலூர் நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், 23 இடங்களில் திமுகவும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, ஆகியவை தலா ஒரு இடங்களில் போட்டியிடுகின்றன. இதுவரை பேரூராட்சியாக செயல்பட்டு வந்த திருக்கோவிலூர், நகராட்சியாக அறிவிக்கப்பட்டு, முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.