ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க வினர் போராட்டம்: கொரோனா தொற்று சுகாதார பணிகள் செய்யபடவில்லை என குற்றச்சாட்டு

16 May 2021, 8:15 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொரோனா தொற்று சுகாதார பணிகள் செய்யவில்லை என கூறி திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும், எவ்வித பாதுகாப்பு சுகாதார பணிகளும் செய்யபடவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமுல்லைவாசல் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டனர். நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலை ஏற்பட்டும் இதுவரை ஊராட்சியில் கிரிமி நாசினி, பிளீஞ்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட எந்த சுகாதார பணிகளும் செய்யபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.கவினர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்தும் முககவசம் அணிந்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 42

0

0