தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க கிரிமினல் நோக்கத்தோடு செயல்படும் திமுக: அமைச்சர் நிலோபர்கபில் பேச்சு

13 November 2020, 10:34 pm
Quick Share

திருப்பத்தூர்: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க கிரிமினல் நோக்கத்தோடு செயல்படும் திமுகவினர் என அமைச்சர் நிலோபர்கபில் என தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி திருப்பத்தூர் ஒன்றித்திற்கு உட்பட்ட  ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு,குரிசிலாப்பட்டு உள்ளிட்ட 5 ஊராட்களில் ஒன்றிய செயலாளர் பி.கே.சிவாஜி தலைமையில்  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கலந்து கொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய அவர், திமுக கட்சியினர் லேப்டாப் வைத்து கொண்டு தெருவில் வரும் பெண்களிடம் உங்கள் வீட்டில்  பிரிட்ஜ், வாசிங்மிஷின்,தையல் மிஷன்  இருக்கா என கேட்டு அடுத்த ஆட்சி திமுக தான் என கூறி இல்லை என்றால் இலவசமாக தருகிறோம் என மாயாஜால வித்தைகள் கூறி கிரிமினல் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர் என அமைச்சர் பேசினார்.

Views: - 17

0

0