தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்தியை நம்ப வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!!

Author: Aarthi Sivakumar
30 March 2021, 2:05 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்கிற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் , மீண்டும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற செய்தி வெளியானது. இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுபாடுகள் இருக்கும்.

முழு ஊரடங்கு வரப்போகிறது, இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்கிற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என கூறினார்.

Views: - 76

0

0